 |
கட்டுரை
என் ரகசியம் வெண்ணிலா மீரான்
சிப்பிக்குள் விழுந்த முத்தாய் - அன்று
என்னுள் நிறைந்த ரகசியம்
கோடி பூக்கள் கூடிவந்து என் இதயத்தில்
பூத்துக் குலுங்க வைத்த ரகசியம்
கண்ணினை இமைபோல் காத்து - நன்கு
வளர்ந்து வந்த ரகசியம்
ஊன் உறக்கம் திருடி என்னின்
உலகை மாற்றிய ரகசியம்
உயிரை பிரிக்கும் நிலைபோல் என்னுள்
வலிகள் தந்த ரகசியம்
விண் ஏறி மீன்களோடு எனை
விளையாட வைத்த ரகசியம்
பிறவிப் பயன் தீர்த்து என்னை
தாயாக்கிய என் ரகசியம்
பாதுகாத்த ரகசியம் பளிச்சிட்டு உலகறிய - பல
பட்டாம்பூச்சிகள் என்னுள் பறக்கவைத்த ரகசியம்!!!
- வெண்ணிலா மீரான் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|