 |
கவிதை
பரமபதம் வீரமணி இளங்கோவன்
ருசிக்கத் தின்றபின்னும்
தீராத வேட்கையோடு
நாக்கு
அணைத்து அடங்கியபின்னும்
முன்னிலும் உயரமாய் கொழுந்துவிடும்
காமம்
உயரே பறக்கவிட்டும்
கம்பங்களைத் தேடியபடியே
புகழ் மோகம்
நம்மில் சிலரே அறுக்கிறார்கள்
அறுக்கமுடியாத பலரும்
மீண்டும் பிறக்கிறார்கள்
- வீரமணி இளங்கோவன் [email protected]
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|