 |
கட்டுரை
கோலிக்காய் கோட்பாடுகள் வே. ராமசாமி
அவரவர் வீட்டுப்பக்கம்
ஆட்டக்களம் அமையுங்கள்
சச்சரவுகளின்போது
அம்மாக்கள் வந்து
தீர்ப்பளிக்க ஏதுவாக
ஆடு மேய்க்க
அடம் பிடிக்க
மாடு பத்த
மறுக்க
இன்று
உவ்உவ் ஊதா
மஞ்சமஞ்ச மஞ்சை
நெத்தச்சிவப்பு
புத்தச்சிவப்பு
புத்தம்புதுக் கடசல்கள்
நேருக்குநேர் மோதல்
மழையைச் சபிக்க
டங்கான் கடன்
வெறும்பையோடு
வீடுதிரும்பல்
நீங்கள் ஆடும்போது
கசடுபவனை
நன்கு கவனிக்க
பித்தி போடாதே
ஏத்துங்கட்டு
கொழுவி விடாதே
உச்சிப்பிடி
கடைசிக்காய்
என்றாலும்
கை நடுங்காதே
மெத்தினால்
போட்டு வைக்க
காக்கிடவுசர் அணிக
உப்புக்குச் சப்பாணியை
துரத்தியடிக்க
கோலி மாயமாகும்
அபாயங்குறிக்க
நூறுகோலி
வைத்திருப்பவன்
இல்லந்திறந்திருக்கும்
நேரம் அறிக
அவன் வீட்டுப் பரணியில்
புதையல் எடுக்க
உங்கள்
உலைமூடி நிறைந்த
கோலிச்செல்வங்களை
கிணற்றில் வீசிய
அப்பன்களின்
நெற்றிப் பொட்டைப் பெயர்க்க
இயலாதோர்
அண்டர் வேரையாவது
ஒளித்து வைக்க
வீட்டில் எதிர்ப்புள்ளோர்
வேலிமரத்தடியில் புதைக்க
கோழி கிளறி
எல்லாம் பொதுவுடமை
ஒருகோலி = பத்து இலந்தைப்பழம்
பத்துக்கோலி = ஒரு உழக்கு புளிய
முத்து
கோலி = திருச்செந்தூர்க் கடல்
- வே. ராமசாமி
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|