 |
கட்டுரை
புரிந்தறியாதவைகள்...! தியாகுஆசாத்
நெய் சாதம்
பால் சோறு
கிண்ணத்தில் பிசைந்து !
வாய் நிறைந்து
ஒழுக ஊட்டுவாள். .!
உதிரி மல்லியை
கிண்ணத்தில் உதிர்த்து
மாலை கட்டுவாள்.
பூஜையறையில்
எப்போதும் புல்லாங்குழல்
வாசிக்கும் கிருஷ்ணணுக்கு..
கண்ணாடி குடுகையில்
வாழும் மீன் குஞ்சுகளை...
கிண்ணத்தில் நீருற்றி
கொஞ்சம் விளையாடவிடுவாள்.
சிவந்த பிஞ்சு விரல்கள்
மேலும் சிவக்க..
பச்சை மருதானியை
கிண்ணத்தில் எடுத்து
மேலும் அப்புவாள்..!
கிண்ணத்தில்
இரவு பாலூற்றி
காலையில் தயிரெடுத்து
மாயாஜாலம் எப்படி என்பாள்.
மஞ்சளென..சந்தனம் வழிய
அவள் கல்யாணவிழாவில்
எல்லோர் முகம் முன்னாலும்
வந்து போனதாம் கிண்ணம்..!
அவள் ஞாபகமாய்
தன்னுடனே
கிண்ணத்தை வைத்திருக்கிறார்
அப்பா.....
சிகரட் குடித்துவிட்டு
சாம்பலை தட்டுவதற்கு..!
- தியாகுஆசாத் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|