 |
கட்டுரை
கற்பு என்பது.....! தியாகுஆசாத்
எனது பதினான்காம் வயதில்
நிகழ்ந்தது
முதல் பாலியல் பலாத்காரம்!
அப்பாவின் உயிருக்கு உணவாய்..
மாத்திரை கொடுக்க..
கடைக்கு அனுப்பினாள் அம்மா!
போகும் வழியில் இருபசங்கள்
அடித்த கமெண்ட் "செமகுட்டிடா"
மேலாடையோடு
முதன்முதலாய்
மனம் கற்பழிப்பழிக்கப்பட்டது!
விரலால் தீண்டி
விரகதாபம் தீர்த்தது
பயணச்சசீட்டு தரும் சாக்கில்
ஒரு ஜந்து..!
ஒரு உரசலில் தாம்பத்தியத்தை
உணரவைத்தது
சகபிரயாண மிருகம்!
சின்ன பருவத்தில்
வாங்காத அடியேல்லாம்.
இடியாக விழுந்தது
உடலில்...
என் முதலிரவில்
"அசதிய இருக்கு
நாளை வச்சிக்கலாம்"
என்ற கோரிக்கை கிழிக்கப்பட்டு
முதன்முதலில்
மனதோடு சேர்த்து
உடலும் கற்பழிக்கப்பட்டது!
வயதான அம்மாவை
காண
கைக் குழந்தையோடு
பிறந்த வீடு நுழைந்தேன்.
மாத்திரை கேட்டாள்
வாங்க போனேன்
போகும் வழியில் இருபசங்கள்
அடித்த கமெண்ட் "செமகட்டைடா"
ஒரு செமகுட்டி
செமகட்டை-யான
பெருமிகு வரலாறு இது!
ஏய் ஆண்களே..!
எனது இடது மார்பை
திருகி எரிந்தால்
மதுரை என்ன....?
இனி ஒரு மெழுகுவர்த்தி கூட எரியாது.!
- தியாகுஆசாத் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|