 |
கட்டுரை
தந்தை பெரியார் தியாகு
சாதி மருட்டினை மோதி விரட்டி
சாதிக்க பிறந்த சூரியனே!
இல்லை கடவுள் இருந்திடில்
இருக்குமே சமதர்ம நீதி யென்றாய்!
உதிக்கின்ற சூரியனும் அடிக்கின்ற
காற்றும் அனைவர்க்கும் பொதுவானபோது -பூமியில்
பிறக்கின்ற பிள்ளைக்கும் பிறந்து
இறக்கின்ற மனிதற்க்கும் பூமிபொதுவே என்றாய்!
வெள்ளை தாடியும் கருப்பு சட்டையும்
கையில் தடியும் வார்த்தையில் வெடியும்- கொண்டுநீ
நடந்ததால் விடிந்தது எங்கள் காலை!
சாமி இருந்திடில் வேதம் இருந்திடும் -
பேதம் இருந்திடும் அதனால் சாமிஒழித்திட
புறப்பட்ட எங்கள் புதுசாமி நீ!
- தியாகு ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|