 |
கவிதை
முதிர்ச்சி பா.திருமுருகன்
பொங்கள் திபாவளி
எத்தனையோ பண்டிகைகள்
ஞாபகத்தில்
சின்னபிள்ளை மச்சான் மட்டும்
நடந்துகொண்டேயிருக்கிறார்!
காரணம்
அவரிடம்
சித்ரகுப்தனாய்
சிலகாலம் கணக்கெழுதியிருக்கிறேன்
ஆடுகளின்
ஆயுள் ரேகையை
கூறுப்போட்டு
கூப்பிட்டுக் கொடுத்திருக்கிறேன்
இரத்தம் தனியாய்
சதை தனியாய்
தலை தனியாய்
கால் தனியாய்யென்று!..
நானும்
ஆடு மேய்க்கப்போய்
அழுதிருக்கிறேன்
அது
அடுத்தவன் தோட்டத்தில்
மேய்ந்ததால்
அப்பாவிடம் அடியும் வாங்கியிருக்கிறேன்
ஒரு நாள்
கட்டியிருந்த ஆடு
காணவில்லை!
அம்மாவிடம் கேட்டேன்
அருப்புக்கு கொடுத்துவிட்டதாய்
சொன்னால்
என்
படிப்புச் செலவுக்கு
பணமில்லையாம்!
பாவம்
அந்த ஆடுகள்
இன்னும்
என்னைப்போல்
யார்யாருக்கோ
உயிரை விட்டிருக்கலாம்!
இன்று!
விட்டில் பூச்சிகளுக்காக
விளக்குள் கூட
எதிரியாய் தெரிகிறது
எனக்கு
- பா.திருமுருகன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|