 |
கட்டுரை
யுத்தமும், கதறலும் திரு
நிச்சயமற்ற பொழுதில்
பதுங்கு குழியில் பதறும் - என்
நெஞ்சம் - பேரழிவே!
நீ தான் விடுதலையா?
பிணம்தின்னி கழுகின்
கொடிய அலகிலிருந்து
பாம்பின் நச்சு பற்களில் - எங்கள்
எதிர்காலம்!
விடியலைத் தேடிவிம்மி அழுத
நெஞ்சம் - படைகளை
கண்டு பதறுகிறது!
கனகுண்டுகளை கண்டு
கணங்கள் உறைகிறது...
கண் விழித்து பார்க்கும்
போதெல்லாம் உலங்கு வானூர்திகளும்
கனல் குண்டுகளும்...
கனவில் கூட புதைகுழிகள்...
பேரழிவே! உன் பெயர் தான்சுதந்திரமா?
அழிவே எங்கள்
தாயகத்தின் தேச அடையாளமாய்...
ஆயுதங்கள் மட்டுமா
பேரழிவு? - உந்தன்
தடைகளில் மடிந்தவர்
எதனால்....?
உனக்கும், அவனுக்கும்
வேறுபாடென்ன?
அடிப்படையில் கொள்கை
ஒன்று தானே!
மரணம் மரணத்தை நிறுத்துமா?
பேரழிவாளன்
அழிவை தடுக்க முடியுமா?
கருப்புத் தங்கம் மீதினில்
கதற வைத்தகால தேவனே - வந்துவிடு
அழிந்த - எந்தன்
மழலை வேண்டாம்...
விடுதலையை மட்டும்
திருப்பி தந்துவிடு!
- திரு ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|