 |
கட்டுரை
எது பொருத்தம்?
சி.வ.தங்கையன்
பையனுக்கு வெளி நாட்டில் நல்ல வேலை.
பை நிறைய சம்பளம் என்றார்கள்.
கார் பங்களா வசதிகள் கம்பெனி செலவில்
கிடைத்திருப்பதாய்ச் சொன்னார்கள்.
இதைவிடச் சிறந்த ஒரு மாப்பிள்ளை
எங்கேயும் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.
நல்ல படிப்பு வசீகரத் தோற்றம்
எல்லா வகையிலும் திருப்தியாய்த் தெரிந்தது.
ஜாதகம் ஜோசியம் சரியாய் இருப்பதாய்
பத்துக்கும் மேற்பட்டோரிடம் பார்த்தாகிவிட்டது.
பன்னிரண்டு பொருத்தமும் நட்சத்திரமும்
அமோகமாய் அமைந்திருப்பதால்
அருமையான வாழ்க்கை மகளுக்கமையும் என்றனர்.
அதி விமர்சையாய்த் திருமணம் நடந்தது.
ஆறேழு மாதம் வாழ்க்கையும் தொடர்ந்தது.
மகள் வந்தாள் வீட்டிற்கு, மகிழ்ச்சி தொலைந்தது.
பெற்றவர்கள் முகங்களில் பீதி படர்ந்தது.
பொருத்தம் பொருத்தமென்று
திரும்பத் திரும்பப் பார்த்தவர்கள்
வருத்தப் பட்டார்கள்
பார்க்கத் தவறியதை நினைத்து.
மருத்துவச் சோதனை செய்து பார்த்திருந்தால்...
மகள் தப்பி இருப்பாள் 'எய்ட்ஸில்' இருந்து.
- சி.வ.தங்கையன், பட்டுக்கோட்டை. ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|