 |
கட்டுரை
தனதனே தமிழா! சுரேஷ்
வெளிநாட்டிலும் உள்நாட்டிலும்
வெள்ளியும் தங்கமும் அள்ளும்
கோடீஸ்வர தனவானே
தனதனே
தமிழா!
தாயகம் என்றதும்
நினைவு வருவது
உனது
குடும்பம் மட்டும் தானா?
உனது இனத்தோரின்
ஏழ்மைக்கும்
நோயிற்க்கும்
என்ன வழி தான்
வைத்திருக்கிறாய் ?
உனது
ஒரு நாளில்
ஒரு வேளை
தேநீர் செலவில்
உலக ஏழை
தமிழினத்தின்
ஒரு குடும்பம்
ஒரு வேளை
பட்டினி மறக்குமே?
தொடர்ந்து உதவி செய்வோரின்
பாதங்களை வணங்காமல்
இருப்பது எப்படி ?
ஆனால்
உதவாத தமிழனிடம்
உரிமையாய்
கோபம் காட்டினால் தவறா?
தமிழ் இனத்தை காத்திட
உக்கிரமாய்
உதவ சொல்லும்
அன்பின் எச்சரிக்கை புரிகிறதா?
உனது பேரனும்
அவனது பேரனும்
தமிழன் என்று சொல்லி
பெருமை பெற வேண்டாமா?
தமிழினத்திற்கு உதவி செய்
அதுவும்
உடனே உதவி செய்!
தமிழா !
நீ உயர்ந்து
உனது இனத்தையும் உயர வளர்த்து
அதற்கு பின்..
தமிழன் என்று சொல்
தலை நிமிர்ந்து நில்!
- சுரேஷ், சென்னை ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|