 |
கட்டுரை
பிரிவின் உணர்வுகள் சுரேஷ்
மனைவியே !
முன்னதாக நீ சென்றால்
உடனே
எனை அழைத்திடுவாய்
என்றாயே ?
பத்து வருடமாச்சே !
நான் உயிருடன் சாகிறேன்
நீ இல்லாமல்.
உனது பிரிவில் உனதருமை
உருக்கமாய் உணர்ந்துவிட்டேன்
பூமியில் மரித்து
உன்னுடன் ஜனனமாகத்
துடிக்கிறேன்
கணவன் இழந்த மனைவியின்
கண்ணீர் வாழ்க்கையில்
ஒரே ஒரு மரணம் - ஆனால்
மனைவி இழந்த
நல்ல கணவணுக்கோ
கண்ணீர் மறைத்த வாழ்க்கையில்
ஒவ்வொரு நொடியும் மரணம்
செடிகளிடமும் பூக்களிடமும்
உறங்கின கட்டிலிடமும்
எனக்கு பதில் சொல்ல முடியவில்லை
பத்து வருட தோல்வியின்
தகுதியோடு கேட்கிறேன்
எனை உடனடி எடுத்துக்கொள்
உனை நான் கண்டதும்
கேட்பது முத்தமல்ல....
உனது
காலில் விழுந்து மன்னிப்பு !
- சுரேஷ், சென்னை ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|