 |
கவிதை
மண்ணுக்கும் மனிதனே வில்லனா? சுதர்மன்
இயற்கையை இயக்க முடியாது
ஏன் மனிதன் கடவுள்லல்ல
கண்டதை சொல்ல முடியாது
ஏன் மனிதன் கடவுள்லல்ல
மூப்பை தடுக்க முடியாது
ஏன் காலச்சுழல் கையால்சுற்றுவதல்ல
சாவைத் தடுக்க முடியாது
ஏன் தளிரும்பூமியை தாங்குவது மனிதனல்ல
முயற்சி முன்னேற்றம் பயணங்கள்
ஏன் முற்றும்யெவரும் தெரிந்தவரில்ல
வாழும் வரைதான் வாழ்க்கை
வாழ்ந்த பின்அது இயற்கை
புரியாதபுலன்களுக்கு போரும் அழிவும் எதற்கு
புரிந்து வாழும்தகுதி மனிதனுக்கு இல்லையா
சூரியகுலத்தின் விண்ணும் வெளியும்
மண்ணுக்கும் மனிதனே வில்லனா?
- சுதர்மன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|