 |
கவிதை
தேவதை கனவு
ஷைலஜா
வானவெளியில்
சாடீன் சிறகுகளுடன்
வெள்ளி கிரீடமுடன்
விழிகளை மூடியபடி
பறக்கிறேன்
திடுமெனக் கேட்ட ஒலியில்
விழிப்பு வந்துவிட
வீட்டில் கோரைப்பாயில்
பாதி படித்துவிட்டுப்போன
சின்ட்ரெல்லாவை
அணைத்துப்
படுத்திருக்கிறேன்
சாடீன் சிறகுகளுடன்
பறந்த நான் தேவதையா
தேவதைகள் பற்றிக் கனவு காணும்
மனுஷியா
நாளை பறக்க நேரிட்டால்
இரண்டில் ஒன்று
உறுதியாகிவிடும்!
- ஷைலஜா ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|