 |
கட்டுரை
எதுமே இல்லாத ஒன்றில் ஷாஜஹான் பீர்முகம்மது
வெற்றுத்தாளில்
எதுவுமில்லையென
வீணாய் விவாதிக்கிறது
உலகம்
பாறையில் ஒழிந்திருக்கும்
சிற்பங்களென
வண்ணங்கள் குழைந்த
ஓவியங்களென
பரிணமித்த
எழுத்துருக்களென
எல்லைகளற்ற பிம்பங்கள்
படிந்துக்கிடக்குமதில்
அவசியமற்றவைகளை
விலக்க விலக்க
முடிவற்று விரிகிறதொரு
வானம்
- ஷாஜஹான் பீர்முகம்மது ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|