 |
கவிதை
கவிதை வருவதில்லை... சேஷா
நான் முற்றிலும்
தீர்ந்துவிட்டதாக ஒரு
எண்ணம்...
குறைந்தபட்சம்
அவளை பற்றிக்கூட
கவிதை
எழுத முடியவில்லை..
என் உலகத்தை
சுற்றிப்பார்த்து விட்டு
என்னை பார்த்துக்கொள்கையில்
நான்
ஒரு அஃறிணையாகி விடுகிறேன் ...
என் இயல்புகள்
இயங்க மறுக்கின்றன..
கூடிழந்த
பறவைகளை பார்க்கையில்
சமீபகாலமாய்
கண்ணீர் வருவதில்லை..
குழந்தை
அழுகின்ற சத்தம் கேட்டால்
தூக்கம் கலைவதில்லை....
கால் நனைந்திடக்கூடாது ...
என்னும் கவனத்தோடே
கடற்கரையில் நடக்கிறேன்..
மழைத்துளி பட்டுவிட்டால்
துடைத்துக் கொள்ளும்
புதுப் பழக்கம்...
சில சாதாரண
குணாதிசயங்களோடு
என் உலகத்தை
சுழற்றிக் கொண்டு இருக்கிறேன்...
என் தேகத்துக்குள்
இன்னொரு தேகமும்
என் உயிருக்குள்
இன்னொரு உயிரும்
இருப்பதை
மெல்ல மெல்ல உணர்கிறேன்..
அவன்...
அவன்
கவிஞன் அல்லாத
ஒரு போலி...
- சேஷா ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|