 |
கவிதை
சசிகலா கவிதைகள்
இரவில் மழை!
ஆர்பாட்டம் செய்து அழுகிறாள் வான மகள்!
ஆசை கொண்ட மனாளன்
ஆதவனை காணவில்லை என்று!
அதிகாலையில் வந்து விடுவான்
ஆதவன் என்று
ஆறுதல் சொல்வதற்கு
அருகில் யாருமே இல்லையோ ?
காத்திருக்கிறேன்!..........
காதலுக்காக
தன் மலர்களை
தியாகம் செய்துவிட்டு
தனிமையில்
காத்திருக்கும் ரோஜா செடிகளை போல
நானும் காத்திருக்கிறேன்
உனக்கான என்
ஊமை காதலோடு!
தியாகம்
எனக்கு மிகவும் பிடித்தது
செருப்பு!( ?)..
ஏனெனில்
நான் அதை மிதித்தாலும்
அது என்னை சுமக்கிறது !!......
- சசிகலா கவிதைகள் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|