 |
கட்டுரை
கொலைக்கூத்து த.சரீஷ்
அழகிய வாழ்வுக்கு ஏங்கும்
அடுத்த கணப்பொழுது
உடனடியாக பறிக்கப்படும்
உரிமைகள்...!
சில சமயங்களில் உயிரும்...!
சகோதரிகளின்...
உயிரிலும் மேலான கற்பு
பரிதாபநிலையில் களவாடப்படும்...!
உடல்மட்டும்...
மண்ணோடு மண்ணாகிப்போகும்
அல்லது...
கல்லோடு கட்டப்பட்டு கண்ணீருடன்...
தண்ணீரில் மூழ்கிப்போகும்...!
பாதுகாப்பு...
உறுதிப்படுத்தப்படாத நிலையில்
உயிருக்கு உறுதியற்ற பதற்றம்
எப்போதும் நிலவலாம்
மனிதம் பரவியுள்ள
புனித தேவாலையத்தில்கூட
அமைதி குலையும்
கொடிய கொலைக்கூத்து அரங்கேறும்...!
எமக்கோ என்றும்...
மாறாத துயராய் தொடரும்
மாமனித மரணங்கள்..!
அவர்களுக்கோ அது
வெறும்...
பத்தோடு பதினொன்றாய்...!
இன்னும்
சமாதானம் வாழ்கிறது என்று
எப்போதோ...
செத்துப்போன ஒன்றுக்கு
உயிர்கொடுக்கும்
இன்றய அரசியலுக்கு நடுவில்...
ஏதோ...
ஜெனநாயகம் என்றும்
அடிக்கடி அலட்டிக்கொள்கிறார்கள்
இருப்பினும்...
இன்று வரை...
இராணுவத்தின் ஆட்சிதான்...!
இன்னும்...
ஒரு இனத்தின்மேல்
திணிக்கப்பட்ட...
அடக்குமுறை அரசபயங்கரவாதமாய்..!!!
- த.சரீஷ், பாரீஸ் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|