 |
கட்டுரை
காதல் தோல்வி இரா.சங்கர்
காதல் தோல்வியா?
அழு...
வாய்விட்டு அழு...
கதறிக்கதறி அழு...
உன்
கண்ணீரோடு காதலும்
கரைந்து போகும்வரை
அழு...
பின்பு
உலகத்தைப் பார்...
காதலையும் மீறி
எத்தனையோ அழகுகள்...
காதல்தோல்வியும் தாண்டி
எவ்வளவோ பிரச்சனைகள்...
அழகுகளை ரசிக்கக்
கற்றுக்கொள்...
பிரச்சனைகளை தீர்க்க
பழகிக்கொள்...
வாழ்வதற்கே வாழ்க்கையென்பதை
புரிந்துகொள்...!
பெற்றவள் இறந்தாலே
கண்ணீர்தான் சிந்துகிறாய்...
காதல் இறந்ததற்கா
உயிரைச் சிந்தத்துணிகிறாய்?
காதல் புனிதமானதுதான்...
புனிதமான தெதுவும்
உயிரை விலையாய் கேட்பதில்லை.
விலங்குகளை பலிகொடுத்து
கடவுளின் புனிதத்தை கெடுக்கிறோம்...
நம்மையே பலிகொடுத்து
காதலின் புனிதத்தை கெடுக்கிறோம்.
நண்பா...
காதல் தோல்வியா?
காதலியை வெறுத்திருந்தால்
தேடிச்சென்ற காதலை மறந்து
தேடிவரும் காதலை அணைத்துக்கொள்...
காதலையே வெறுத்திருந்தால்
களவைப் போல காதலையும்
கற்று மறந்ததாய் நினைத்துக்கொள்...
வாழ்க்கையென்பது வாழ்வதற்கே
என்பதைப் புரிந்துகொள்...!
- இரா.சங்கர் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|