 |
கட்டுரை
காதல் துளிகள் இரா.சங்கர்
என் காதலி மேல் என் காதல் தூவிய மழையில் ஒரு சில துளிகள் இதோ உங்கள் பார்வைக்காக...
உங்களுக்கு பார்த்து ரசிக்க மட்டும்... நனையும் உரிமை அவளுக்கு மட்டும்!!!
துளி – 1
கதிரவன் போல உன் கண்கள்...
என் இரவு விடியாமல் காத்திருக்கிறது
நீ வருவாய் என...!
துளி – 2
என்னவளின் கூந்தல் பார்த்து
பொறாமையில் முகம் கறுத்து
அழுகிறது மேகம்...
பொழிகிறது மழை!
துளி – 3
கணப்பொழுதும் நீங்காமல்
உன் விழிநோக்கி
வாழ்வேனாயின்
மரணமும் மறந்துபோகும்
எனக்கு!!!
துளி – 4
நீ
ஒளிந்துகொண்டாய்...
நான்
தொலைந்துபோனேன்!
துளி – 5
அவள் எதிரில் வருகையில்
என் விழித்திரையின் அளவைகள்
சுருங்கி விடுகிறது போலும்...
அக்கணம் அவளைத் தவிர
வேறொன்றும் தெரிவதில்லையே எனக்கு!
துளி – 6
கூட்டநெரிசலில் கண்டேன்
ஒரு கவிதைத்தொகுப்பை!
வியர்த்துவிட்டது எனக்கு...
நெரிசலில் அல்ல...
மனதில் வரைந்த ஓவியம்
உயிர்பெற்றெழுந்து கண்முன்
தோன்றிய ஆனந்த அதிர்ச்சியில்!
- இரா.சங்கர் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|