 |
கட்டுரை
இருளை ரசிக்கின்றேன் சக்தி சக்திதாசன்
உருவமில்லாதது
பிறந்த, நாளின் இறப்பு
விடிந்த பொழுதின் மறைவு
ஆம்
இரவின்
இருளை நான் ரசிக்கிறேன்
தன்னைத்
தானே அறியாதது
யாருக்கும் எதிர்பார்ப்பு
கொடுக்காதது
ஆதவன் ஒளிய
ஆகிய இரவு
இரவின்
இருளை
நான் ரசிக்கிறேன்
உழைப்பவன் ஓயவும்
கறப்பவன் விழிக்கவும்
காலத்தைக் காட்டும்
நிறமற்ற நேரம்
அது இரவு
இரவின்
இருளை
நான் ரசிக்கிறேன்
உணர்வுகள்
உறங்கும் நேரம்
ஆசைகள் விழிக்கும்
வேளை
மணமற்ற மலரே
இரவு
இரவின்
இருளை
நான் ரசிக்கிறேன்
- சக்தி சக்திதாசன். ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|