 |
கவிதை
வெட்கம் சகாரா
ஒட்டிய வயிறு
கையேந்தும் விழியில்லா முடவன்.
இரக்கமற்ற பல இதயங்கள்.
நீள்கிறது ஒரு கை...
'இந்தா! உனக்கு ஒன்று
எனக்கு ஒன்று'
யாசித்தவனிடம் கொடுத்து விட்டு
பிறிதொரு ஈரவிழி தேடுகிறான்
ஒற்றைக்கண் பிச்சைக்காரன்.
வெட்கித் தலை குனிகிறது
பேருந்துக்காக காத்திருக்கும்
ஜனங்களின் மனங்கள்...
- சகாரா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|