 |
கவிதை
ரகசிய விசும்பல் சகாரா
கருகிப்போன உயிர்ச் சருகின்
சாம்பலில் பூக்கின்றன
உன் நினைவுத் துளிகள்.
என் அழகான தனிமை
கிழிக்கப்படுகிறது உன்னால்...
மெளனத்தின் வார்த்தைகளெல்லாம்
கேட்கப்படுவதேயில்லை.
அதிகாலைப் பனித்துளிக்காய்
நடு இரவிலேயே
விழித்துக் கொள்கிறது மனசு.
விடிந்தது புரியாமலேயே
இமைகளுக்குள்
சுருண்டு விடுகிறது உறக்கம்.
துடிப்பதை மறந்து போன இதயம்
தற்போதெல்லாம்
ரகசியமாய் விசும்பிக்
கொண்டிருக்கிறது.
புதிதாய் வெடித்த
உன் நினைவுகளோடு...
- சகாரா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|