 |
கவிதை
விலைமகள் சகாரா
கையில் பால் செம்பு,
படபடக்கும் கண்களில் வெட்கம்,
கால் கட்டை விரல் கோலம்,
இவை எதுவுமில்லாமல் நடக்கிறது.
தினமும் முதலிரவு,
வேளை தவறிய வேளைகளில்.
கதவு தாளிடக் கூடப்பொறுமையில்லை
அவளோடு கட்டில் சேர்ந்தவனுக்கு...
உயிர் உறிஞ்சும்
ஓரவிழிப் பார்வையில்லை.
அடிவயிறு சில்லிடும் அனுபவமில்லை.
உடல் உருக்கும் வலி மட்டுமே
நிரந்தரமாய்...
கட்டிலில் தேவதை,
சமூகத்தில் வேசி.
இவை அடையாளப் பெயர்கள் அவளுக்கு.
ஆனாலும்,
மெளனத்தில் தொலைந்த
அவளின் வார்த்தைக்கு...
இருளில் தொலைந்த அவளின்
மனது கொள்ளும் அன்புக்கு...
என்ன பெயர் வைப்பது?
நெகிழ்ந்த ஆடை போலவே
காணாமல் போனது அவள் மனது.
கட்டிலில் கசங்கிய பூவாய்
கசந்தே போனது.
மனதின் ஆசைகளும்
அவளின் வாழ்க்கையும்...
- சகாரா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|