 |
கவிதை
காதலின் சாரல்கள்.... ரிஷி சேது
1. உன் வெட்கத்தை
ரஸிப்பதற்குமுன்
பூத்துவிடுகிறது
இந்த ஒற்றை ரோஜா
2. நீ என்னோடு
இல்லாத போதுதான்
நான் உன்னை அதிகம்
நினைத்திருந்தேன்
3. ஓர் ஆசிர்வதிக்கப்பட்ட
பொழுதில் நீ
என்னை கடந்துபோனாய்
4. சருகுகளாய்
உன் நினைவுகள்
காற்றாய் நீ
அவ்வப்போது
உரசிப்போகிறாய்
5. வானவில் போல
பார்த்துக்கொண்டிருக்கும் போதே
மறைந்து போய்விடுகிறய்
6. ஓர் போர் வாள் பட்ட வலி
உன் கண் பட்ட உடன்
- ரிஷி சேது ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|