 |
கவிதை
NRI கவிதைகள் ரிஷி சேது
நெருக்க கட்டிய
மல்லியில்லை
நெற்றிக்கண் திறந்த
சிவனுமில்லை
தினம் கூடிக்கலக்க
உறவுகளுமில்லை
பணம்தேடி
காட்டுக்குள் அலைகிறேன்
வலைக்குள்
சிலந்தியாய்....
போனமுறை ஊருக்குப்போனபோது
போர்க்கும் நைபும்
டிஷ்யூவும்
சாப்பிட
யோகர்ட்டும்
பாஸ்தாவும்
கேட்பேனென்று எதிர்பார்த்த
அம்மாவுக்கு
ஏமாற்றமாயிருந்தது
நான்
பழைய சோறும்
பச்சை வெங்காயமும் கேட்டது....
ஆயிற்று நாள்
முப்பது
பாதியை
உறவுகளும்
பாதியில் பாதியை
நண்பர்களும்
தின்றதுபோக
உறங்கிக் கழித்தேன் மீதியை
பார்த்தவர் கேட்டனர்
எப்போ ப்ளைட் என்று
எங்கே நான்
அங்கேயே இருந்துவிடுவேனென்று.....
அங்கே இப்போ
நேரமென்னவெனவும்
என்ன சமையல் இன்றைக்கெனவும்
எல்லா டிவியும்
தெரியுமாவென்றும்
எல்லாச்சாமானும் கிடைக்குமாவெனவும்
வெயில், குளிர்
எப்படியெனவும் மட்டுமே
பேசிமுடிக்குமென்
உறவுகள்
பெருத்த
சுகமாகவே இருக்க
எப்போதுமே வேண்டுவேன்
இங்கில்லா
கருப்பசாமியையும்
அய்யனாரையும்....
- ரிஷி சேது ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|