 |
கவிதை
என் அம்மாவின் காதல்…
ரவிகுமார். தி
ஒரு காற்றற்ற வெளியிலே
வானமற்ற நிலா வெப்பக்கதிர் வீச
சத்தங்கள் செத்து விட்ட வீதியில்
சொல்லும் வார்த்தை போய் சேர
எல்லை இல்லாமல்
சுற்றும் முற்றும் பார்த்து
தலை சாய்த்து
கண்மூடி
உரக்க சொல்ல வந்தாள்
தன் பழைய காதலை…
முடியாமல் முணுமுணுக்க முயலுகையில்
தட்டி விட்டுப் போகிறது
சமூகத்தின் பேரிரைச்சல்…..
- ரவிகுமார். தி ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|