 |
கவிதை
ஒரு தாயின் கதறல் ராஜகுமாரன்
ஆசையா பெத்தெடுத்து
அரவணைப்பா வளர்த்தெடுத்து
குட்டிப்பொண்ணு அவ
குமரியா வளர்ந்தபின்னே
வாசலிலே வாழைகட்டி
வாயார உரைக்கூட்டி
பொண்ணு கல்யாணத்த
நல்லாத்தான் செய்தேனே
வெள்ளிபாத்திரத்த
அள்ளி அள்ளி கொடுத்துங்கூட
ரூபா நோட்டுகள
கட்டுகட்டாக் கொடுத்துங்கூட
சீர்சினத்தியின்னு
சிறப்பாத்தா செய்தேனே
இன்னும் போதலையின்னு
எம் பொண்ண அனுப்பிவெச்ச
ஏதேதோ கேட்டுகேட்டு
அடிச்சு உதைச்சுவிட்ட
என்னெ,
அம்மான்னு கட்டிகிட்டு
அழுதாளே, மாப்பிள்ள
அத பார்க்க எங்க
மனசுக்குத்தான் பொருக்கல
நீங்க கேட்டு நாங்க
என்னத்த கொடுக்கல
திரும்ப திரும்ப கேட்டா-அது
எங்களுக்கு முடியல
பெத்தவங்க நிலமயபாத்து
புருசனோட கொடுமையபார்த்து
என்னத்த நினைச்சாளோ
எங்கண்ணு- அய்யோ தீய
வெச்சுகிட்டாளே எம்பொண்ணு
அய்யா, பொண்ணும் மணியும்
பொட்டலமா நாந்தாறேன்
எம் பொண்ணபத்திரமா
நீ திருப்பி தாரீயா?
வாழவந்தவள பாடா
படுத்திவெச்சிட்டியே-இப்படி
வாழ இல மேல
படுக்கவெச்சிட்டியே
வாரிகொடுத்தேனே நல்ல
மகராசன் எடம்பார்த்து-அய்யோ
மார அடைக்குதய்யா
எம்மகராசி முகம் பார்த்து
அய்யோ! மகளே ராசாத்தி!
- ராஜகுமாரன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|