 |
கவிதை
பொறுத்திரு காதலி! ராஜகுமாரன்
போர்களத்திலிருந்து
புறப்பட்ட கடிதம்
பூவையின் கைகளில்
புகலிடமாகிறது
இரத்தம் தோய்ந்த
வெள்ளை காகிதத்தில்
நீல வண்ணத்தில்
அவன் எண்ணங்கள்.
ஒரு கடிதம் எழுத
முடியவில்லையா
கண்ணே இது உன்
நியாயமான கேள்விதான்
ஒரு விழி அயர்ந்திருக்கும்
அதை மறுவிழி பார்த்திருக்கும்
காற்றுவந்தால் கூட என்
சட்டைகாலர் விறைத்துப்பார்க்கும்,
பீரங்கி முழங்கியிருக்கும்
பூமி நடுங்கியிருக்கும் - அங்கு
சத்தம் காதைபிளந்திருக்கும்
கொஞ்சம் இரத்தம் ஒழுகியிருக்கும்
எல்லையோர பாதுகாப்பில்
கொள்ளைபோகும் தேசம் காக்க
பல நாள் உறக்கம் கெட்டு - தாய்
மண்ணின் வீர முழக்கமிட்டு
பெண்ணே நான்
பூந்தோட்டத்தில் நிற்கவில்லை
காதலும் கவிதையும் செய்வதற்கு
போர்களத்தில் நிற்கின்றேன்
தேசம் வெற்றி கொள்வதற்கு
பகையை புகையாய் விரட்டிய்டித்து
பாரத கொடியை இமயத்தில்
நாட்டிவைத்துவெற்றிகொண்டு
நாடுதிரும்பியதும்
நெஞ்சல் பூத்த காதலோடு
உன்னை சந்திக்கவருகிறேன்
அப்போது என்னை கட்டி
அணைத்துக்கொள்ளடி
உன் காதல் திகட்ட திகட்ட.
- ராஜகுமாரன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|