 |
கட்டுரை
காதல் தீராதது ராஜ்
உனது வானத்தின் நிலவு
எங்கோ விழுந்து விட்டது
உன் இதயத்தின் சூரியோதயம்
தொலைந்து போய்விட்டது
விசும்பல்களிலும் புலம்பல்களிலும்
புலர்ந்துவிடுவதில்லை - நீ
தொலைத்த வாழ்க்கை அதையும்
கடந்து எதுவோ இருக்கிறது
திரும்பிபார் உனக்கான பாதை
இன்னும் அடைக்க் படவில்லை
முயற்சித்தால் திரும்பிவிடலாம்
பாதையும் வெகு தூரமில்லை
உன் கடமைகளில் காதல்மட்டுமல்ல
விரைந்து முடித்துக்கொள்ள- அதையும்
கடந்து எதுவோ இருக்கிறது உன்
விழிகளை அகல விரித்து பார்
குருகி நிற்பதிலும் குருந்தாடி
வளர்ப்பதிலும் குமுறி அழுவதிலும்
நிறைந்துவிடுவதல்ல உன் காதல்
தோல்வியை தூக்கி தூர
வைத்துவிட்டு தொலை நோக்கு
பார்வையில் உலகைப்பார் நீ
காதலிக்க ஏராளம் ஏராளம்.
- ராஜ் [email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|