 |
கவிதை
வேர் போல் என் காதல்..... மழைக் காதலன்
கண்ணாடி துண்டுகளுக்கு இடையே
நடந்து கொண்டு இருக்கிறேன்
அதில் படிந்த
என் உதிரம்
துடைத்து விட்டு
முகம் பார்க்கிறாய் நீ.....
என்னை கடக்கும்
போது சூறாவளியாய்
கடக்கும் காற்று
உன்னை கடக்கும் போது மட்டும்
தென்றலாய்
ஒரு வேளை காற்றும்
கூட உன் காதலனோ....
முகம் காட்டும்
கண்ணாடி கூட
வெட்கப்பட்டு சிவக்கிறதடி
நீ முகம் பார்க்கும் போது.....
ஒரு காற்றாடி போல
பறந்து கொண்டிருக்கிறேன்
கீழே இருந்து
காதல் நூலால்
நீ தான் இயக்குகிறாய்.....
எதிரொலியாய்
ஒலித்து கொண்டே இருக்கிறது
உன் மறுப்பு குரல்
என் செவிப் பறை
கிழிந்தது கூட தெரியாமல்....
காதல் பூக்களை
அறுவடை செய்ய மனமே இல்லை
நட்டு போனது
நீ என்பதால்...
கடிகார முட்கள் கூட
காத்திருக்கிறதடி உன்
வரவுக்காய்
நீ வந்தால் தான்
அதற்கும் கூட
நல்ல நேரமாம்.....
அழகு என்ற சொல்லுக்கு
பொருள் தேடி
அலைகிறேன்
உன்னை பார்த்த பிறகும்.........
தெரு விளக்கும்
இந்த காகிதமும் பேனாவும்
இருக்கும் வரை
உன்னையும் என்னையும்
யாராலும் பிரிக்க முடியாது.......
செடிகளில் பூக்கும்
மலர்களை நீ
ரசிக்கிறாய்
மண் மூடி கிடக்கிறது
வேர் போல் என் காதல்.....
என் இளமை பருவம்
எழுதிய கவிதைக்கு
நீ கொடுத்த தலைப்பு
முற்று புள்ளி.....
உன்னுடைய இமைகளை
கொஞ்சம் சேர்த்து வை
இரவு எப்படி இருக்கும் என
மறந்து போய் விட்டது....
தூங்காமலேயே
கனவுகள் வலம்
வருகிறததடி
உன்னால் என் வாழ்க்கை கனவாகி
போனதால்.....
எதற்கும்
மற்றவர்களிடம் இருந்து
விலகியே இரு
என்னை போல
வேறு யாராவது ஒருவனும்
கவிதை எழுத போகிறான் .....
தீக் குச்சியாக
இருந்தவன் தான்
நீ என் இதயத்தில்
உரசிய பின்பு தான்
எரிந்து சாம்பாலானேன்......
- மழைக் காதலன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|