 |
கட்டுரை
நீயே..என் தரமான சொத்து ராகினி
அன்பே...உன்னிடம்
கேட்பது காதல்..அல்ல.
காதலுக்குள் இருக்கும்
இதயத்தை.
நான் சுவாசிப்பது
உன்னை அல்ல....
உன் கலங்கமற்ற உயிரை.
உன்னிடம் கேட்பது
நகையல்ல
என் புன்னகையை.
நான் கேட்டது.
உயிரற்ற பரிசல்ல
உன் உயிர் உள்ள
நினைவுகள்
அந்த நினைவுகளே..
என்னிடம் பரிசாய்.
இருக்கும் போது.
உயிரற்ற பரிசெதற்கு.
நீ..கிடைத்ததே..
எனக்கு மிகப்பெரிய சொத்து.
தரமாக நீ..இருக்கும்
போது...தரமற்ற
சொத்தெதற்கு
பிரியமுடன் நீ ...சுமக்கும் போது
பிரியமில்லா உறவெதற்கு.
எது வந்தாலும் நீ..மட்டும்
போதும்.
அதுவரை..நான் பிரியமுடன்
வாழ்வேன்.
- ராகினி, ஜெர்மனி ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|