 |
கவிதை
ஜென்மபந்தம் இராகவன்
உனக்கு எத்தனை முறை
எடுத்தியம்புவது?
இப்படி வரைமுறையில்லாமல்
குறும்பு செய்வது நல்லதல்ல என்று!
சோதிக்கப் பிறந்தவள் நீ!
உன்னால் சோதிக்கப்படுவதற்காகவே
பிறந்தவன் நான்!
உன் ஆய்வின் முடிவு
எப்போது நிகழும்?
என் ஆவி அடங்கிய பிறகா?
உலையில் இருக்கும் நேரம்
அதிகரிக்க இறுகுமாம் இரும்பு!
உன் பாச அலையில் அமிழும் நேரம்
அதிகரிக்க மென்மையாவேன் நான்!
என் ஒட்டுமொத்த ஆண்மைத்திமிரையும்
அரையங்குலப் பார்வையில்
அஸ்தமனம் செய்து விட்டாய்!
இந்த ஜென்மத்தில் உன்
காதலை என்னால் ஜெயிக்க முடியாது!
இருக்கவே இருக்கிறதாமே
ஏழு ஜென்மங்கள்..
நான் நானாகவே பிறக்க வேண்டும்
உன் காதல் நினைவுகளை மட்டும்
மறு ஜென்மத்திற்கு எடுத்துக்கொண்டு..
காதல் ஒரு பழிவாங்கும் படலமில்லை!
இருப்பினும் உன்னை அடுத்தடுத்த
ஜென்மங்களில் அழகழகாய்க்
காதலிம்சைப் படுத்துவேன் காதலியே...
ஜென்மங்களின் மீதான என்
ஒவ்வாமையை ஒதுக்கிவைக்கிறது காதல்!
- இராகவன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|