 |
கட்டுரை
விழித்து பார்த்த நேரம் ராகவன்
விழித்து பார்த்த நேரம்
விழி பிதுங்க வைத்தது
ஆம் இந்த உலகத்தில்
அனைத்தும் கிடைக்கவில்லை
என்றாலும் எனக்காக
என் குடும்பத்திற்கு மட்டும்
கிடைப்பதற்காக என் வழி
கடவுளை நாடினேன்
சிறு வயதில் வறுமை
சில நேரம் பட்டினி
வாடினேன்
என்னை
வழி காட்ட வந்தார்கள்
உன் கடவுளை அடைய
உன் குடும்பத்திற்காக
நீ மாறவேண்டும் என்றார்கள்
நீ உன் மனதை மாற்றி
எங்களுடன் செயல்படு
போதனை செய்தார்கள்
மனித வெடி குண்டாக
தயார் செய்தார்கள்
தைரியமாக சென்றேன்.....
என் குடும்பத்திற்கு பணம்
நான் ஆனேன் பிணம்...
- ராகவன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|