 |
கட்டுரை
அலட்சியம் மாத்திரம்.. ராதிகா பாலா
கால் கடுக்க நடந்து வந்தேன்
காதலி உனைக் கண்டேன்
பாதம் பிடித்து வலி தீர்த்தாய்
வாலிபத்து பருவப்பசியை
வேலி தாண்ட அனுமதித்து
காதலி நீ கனிவாய் தீர்த்தாய்
இதயத்து அன்புப்பசியை
இதமாக என்னிடம் நடந்து
பதமாக பாவை நீ தீர்த்தாய்
வாய் ருசிக்கு வயிற்றுபசியை
வசமாக உணவு படைத்து நீ
ரசமாக சமைத்து தீர்த்தாய்
நாசிக்கு நறுமணமும்
காதுக்கு நல் இசையும்
தலைக்குள்ளே தவிப்பாய்
தமிழறிவுப் பசிக்கும்
அமிழ்தாய் ஈடு தந்த நீ
அட்சயப் பாத்திரம் ஆனாய்..
ஆனாலும் உனக்கு நான்
ஆசையுடன் தந்தேன் என்
அலட்சியம் மாத்திரம்,பதிலாய்!
- ராதிகா பாலா ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|