 |
கட்டுரை
காத்திருக்கும் கவிதைகள் புதிய மாதவி
மவுனத்தில் எத்தனையோ
பேசும் உடல்மொழி
சந்திப்புகளில் ஊமையாய்.
விசாரிப்புகளில்
அர்த்தமிழந்துவிடுகிறது
ஒவ்வொரு சொல்லும்.
எதையோ நினைத்து
எதையோ பேசி
எதையும் சொல்லாமல்
எப்போதும் கழிகிறது
எப்போதாவது சந்திக்கும்
எழுதாதக் கவிதைகள்.
------------------
வனதேவதையின் வாசலில்
பாடிக்கொண்டிருக்கும்
குயிலின் தவம்
கலைந்துவிடாமலிருக்க
அடைகாத்து
விழித்திருக்கிறது
காக்கையின் சிறகுகள்.
*
றக்கை முளைத்தவுடன்
பறந்துவிடும்
கதகதப்பான சுகமனைத்தும்
மறந்துவிடும்
மன்னிக்க முடிவதில்லை
குயிலின் மனவிகாரங்களை
என்றாலும்
எப்போதும் காத்திருக்கிறது
குயிலின் வரவுகளுக்காய்
காக்கையின் கூடுகள்.
- புதிய மாதவி, மும்பை ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|