 |
கவிதை
ஆயிரம் கவிதைகளை சுமந்தபடி! ப்ரியன்
மணல் ஓவியங்கள் -
மண் மீது படியும்
உன் கால்தடங்கள்!
#
தள்ளி நின்றே
கும்பிடு!
இறங்கிவந்து கட்டிக் கொடுக்கச் சொல்லி
அடம்பிடிக்கப் போகிறான்
அய்யனார்!
#
நீ அமைதியாய்த்தான்
இருக்கிறாய்;
உன் அழகுதான்
புரிகிறது
ஆயிரம் அழிச்சாட்டம்!
#
இதழ் ஒற்றி எடுத்தாய்
கைக்குட்டையில்
முளைத்தது ரோஜா!
#
நாட்குறிப்பில் பூத்த
கவிதையை பறிக்க
உனை அழைத்தால் -
நீ வருகிறாய்
ஆயிரம் கவிதைகளை சுமந்தபடி!
- ப்ரியன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|