 |
கட்டுரை
உன் தாவணி ஸ்பரிசத்தில் ப்ரியன்
நீ வாசல் கடக்கையில்
கவர்ந்த வாசனையை
பூசிக் கொண்டு மலர்கிறது
கொல்லைபுற மல்லி!
#
உயிரற்ற செல்களாலாக்கப்பட்ட
உரோமங்கள்
உயிர் பெற்று
குத்தாட்டம் போடுகின்றன;
உன் தாவணி ஸ்பரிசத்தில்!
#
தென்றலை ஒத்த
நடைபயின்று கடந்துச் செல்கிறாய்;
ஆயிரம் சூறாவளிகளை
என்னுள் உருவாக்கிவிட்டு!
#
என்னுடன் ஓடிவருவதானால் -
வீட்டையும் தூக்கிக் கொண்டு வா!
உன்னோடு இருபது வருடம்
வாழ்ந்த அதனோடு
இருபது நாட்களாவது
வாழ வேண்டும் எனக்கு!
#
தலை சூட
நீ மல்லி சேகரிப்பதுப் போல;
என் உயிர் சூட
உன் புன்னகை சேர்க்கிறேன்
நான்!
#
- ப்ரியன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|