 |
கட்டுரை
காற்றின் வரிகள் ப்ரியன்
நிசப்தப் பொழுதில்..
நிலா முற்றத்தில்..
நீ.. விரும்பும்
பாடலின் வரியில்.. - உன்
புன்னகையின் மிளிர்வு..
என்னைத் தூக்கி - உன்
அன்புக்குள் அடக்கிக் கொண்டு
நீ வெளியிட்ட பெரு மூச்சின்
அர்த்தம் புரியாமல் நான் விழித்தபோது
விடியலின் திசைகாட்டியது உன்
விழிகள்..
அந்த இரவுப்பொழுதின்
விடைபெறுதலில்..
வெளியே மழைமேகத்தின்
மின்னலினுடே
இதயத்துள் இடியை
இறக்கிக்கொண்டது பிரிவு..
விடியலின் பொழுதொன்றில்
என் சுவாசம் நிரப்பிய
காற்றின் வரிகளில்..
ஆரோ.. வெடித்துச் சிதறியதாய்
செய்திகள் இருந்தன.
உன் மௌனத்தின் இசையில்..
ஒரு தேசிய கீதத்தின் உயிர்ப்பு மட்டும்
வெளிச்சத்தில் தெரிந்தது
என் வாசலுக்கு
இனித் திரும்பாத உன் கால்கள்...
வந்த திசையில்
சூரியனின் எழுகை
ஒரு
கல்லறை செய்து
காற்றை அதில் நிரப்பட்டுமா.!.?
உந்தன் நினைவாக
- ப்ரியன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|