 |
கவிதை
யாதும் ஊரே பிரேம்குமார் சண்முகமணி
மும்பையெங்கும் இந்தி பேசுபவர்களை
முரட்டுத்தனமாய் தாக்குங்கள்;
பூனே நகரத்துள்
கன்னடப் படம் ஓடும்
கொட்டகை கொளுத்தப்படட்டும்;
பெங்களூரில் வாழும்
தமிழர்கள் எல்லாம் பாவிகள்தாம்!
பலியிடுங்கள் அவர்களை.
பள்ளிகள் மட்டும் பிள்ளைகள்
பாடிக்கொண்டிருக்கட்டும்
'யாதும் ஊரே யாவரும் கேளீர்'
- பிரேம்குமார் சண்முகமணி ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|