 |
கவிதை
கண்ணாம்மூச்சி பூங்காற்று தனசேகர்
மூன்றாம் வகுப்பு
அரையாண்டு தேர்வுத்தாளை
டீச்சர் என்னிடம்
கொடுத்த நொடியில்
நீ பிறந்திருக்கிறாய்.
விடை தெரியாமல்
கேள்விகளையே
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
இன்னமும்.
‘சின்ன வயசுல
சின்ன வயசுல’
என்று தொடங்குகிறாய்
அடிக்கடி.
இப்போது என்னவோ
பெரிய...
பெரியவள் ஆகிவிட்ட
நினைப்பில்.
என் தலையணை உறையில்
உன் துப்பட்டா நூல் கொண்டு
நம் பெயர்கள்
தைக்கப்பட்டிருக்கின்றன.
நிஜத் தொடுகையைவிட
உன் தொடுகை பற்றிய
என் நினைவுகளின்
வெப்பம் அதிகம்.
எதிர்வீட்டுக் குழந்தையின்
நகம் பட்டு
என் முகத்தில் நீண்ட
கீறலினை
நீ மெல்ல மெல்லத் தடவியபோது
உன்னில் அழுதது
என் குழந்தை.
- பூங்காற்று தனசேகர்
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|