 |
கட்டுரை
என் கனா சுப்ரமணியன், செளதி
சுடுகாட்டிலிருந்து சுமந்து வர வேண்டும்
நடுவீட்டில் எழுந்து வர வேண்டும்
உறவெல்லாம் கூடி நிற்க வேண்டும்
கரபிடித்தவள் கட்டி அழ வேண்டும்
பேரனும்பேத்தியும் மகிழவேண்டும்
பெற்றதெல்லாம் நெகிழ வேண்டும்
வயதெல்லாம் குறைய வேண்டும்
வயல்,தோட்டம் வாங்க வேண்டும்
மாலை மாற்றி கொள்ள வேண்டும்
வேலையில் சேர வேண்டும்
கல்லூரி போக வேண்டும்
கள்ளமில்லா நட்பு வேண்டும்
கலங்காத மனம் வேண்டும்
பல பள்ளி போக வேண்டும்
குழந்தையாக மாற வேண்டும்
மழலையாக பேச வேண்டும்
தாய் முகம் மலர்ந்து இருக்க
தாயின் நாடு விட்டு போக
சேயின் முதல் அழுகை வேண்டும்
கருவில் பத்து மாத ஓய்வு வேண்டும்
உருமாறி போக வேண்டும்
தாய் தந்தை மகிழ்ந்திருக்க
வாய்க்கால் வழி நீந்தி
இரு உடலாய் பிரிய வேண்டும்
இறைவனிடம் சேர வேண்டும்...
- சுப்ரமணியன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|