 |
கட்டுரை
வளைகுடா கணவன் சுப்ரமணியன், செளதி
(விடுமுறையில் வாழ்க்கை நடத்தும் வளைகுடா கணவனை கொண்ட மனைவியின் மன ஓட்டம்....)
பாதாம், பிஸ்தா, திராட்சை என பலவும் வாங்கி நீ வந்தாய்
நீதான் உயிர் மூச்சுயென எனை தினமும் பாடி நீ நின்றாய்
ஆதாம் ஏவாள் போல நாமென்று, பகலும் கூடி நீ கலந்தாய்
மாதம் மூன்று ஆனவுடன் எனை தழுவி பிரிந்து நீ சென்றாய்
நீயாய் ஏற்றிய தீபம் நெடுநாள் அணைய மறுக்கிறது.
பேயாய் இந்த சதை உடம்பும் தாளம் போட்டு குதிக்கிறது.
நாயாய் உன் திரு உடம்பும் அங்கே தினமும் ஓடி உழைக்கிறது.
ஆறாய் அனுப்பிய பணம் யாவும் உன் உதிரம் தின்று அழிக்கிறது
அடுத்த தலைமுறை வாழ்க்கைக்கு நம் தலைமுறை அழிக்கின்றோம்.
நடந்து முடிந்த தினங்களையே தினமும் தின்று வாழ்கின்றோம்
கடந்து வந்த பாதையினை திரும்பி பார்த்து மகிழ்கின்றோம்
கடவுள் தந்த திருநாள்கள் தினமும் தோன்றி மறைகிறது..
எதையோ நினைத்து நம் வாழ்க்கை இப்படியாய் போகிறது..
கதையோ என்று பலர் நினைக்க தினமும் போனில் அழுகின்றோம்.....
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|