 |
கட்டுரை
ஒயிலரங்கம்
பிச்சி
நீர்க்குமிழ்கள் வெடித்து தெறித்த
துளிகளாக கண்களை சிமிட்டுகிறது
இரவைச் சிலுப்பிய பகல்.
ஒயிலரங்க மேடைக்கு
ஒளிவித்து.
மழை உசுப்பிய மணத்திற்கும்
முதிர் மறைத்த விழிகளுக்குமிடையே
கங்கணம் கட்டுகிறது மின்னல்
கூரை அலங்காரி.
நுரை சலத்த நீரும்
அகில் மண்டிய வானும்
ஒயிலரங்க மேடைகள்
அந்தி பொழிந்த வர்ணச்சுடரால்
நாடக நொடிகள் பிறழ்ந்து போவதில்லை
கொடியறுந்திடா இளம்பிஞ்சின்
மொழியே போல.
ஆங்காங்கே தொடர்மழையாய்
நாடகம் நடந்துகொண்டிருக்க,
ஒருவருமில்லாமல்
காட்சிகள் நகர்த்திக்
கொண்டிருக்கிறது
ஒயிலரங்கம்.
- பிச்சி ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|