 |
கட்டுரை
பாலையாகும் ஆறு ந.பெரியசாமி
குந்திக் குளிக்க
தோண்டிய குழியை
தேடுவதும் தோண்டுவதும்
தொடரும் தினமும்
விளையாட்டென்பது அறியாமலே
எனக்கும் ஆற்றுக்கும்
வெளிக்காட்டிக் கொள்ளாது
நாகத்திற்கு பயந்து
பறித்த தாழம்பூவை
கொடுத்து மகிழ்ந்து
துளிர்விடும் காதலுக்கு
துணையான ஆறு
பண்டிகை நாளொன்றில்
பந்தயத்திற்காக
அனார் பீடி இருபதை
அடுத்தடுத்து குடித்ததில்
உண்டான மயக்கத்தை
தெளிவாக்கிய ஆறு
வேடிக்கை காட்டி
விளையாடிக் களைத்ததும்
குஷியில் தழுவும்
குழந்தையாய் ஆறு
ஊரே திரண்டிருக்க
வெள்ளம் வந்த நாளில்
வேகம் காட்டிய ஆற்றில்
கொப்பளித்து துப்பக்கூட
வக்கற்று நிற்கும்படியாய்...
கொள்ளை போகிறது
பிளாச்சிமடா கிராமத்தை
சுடுகாடாக்கிய கோக்குக்கு.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|