 |
கட்டுரை
நம்கால ஹோசிமின் பெரியார்தாசன்
மார்க்சீய விதைக்கு ஏற்ப
மண்ணைப் பண்படுத்த வந்த
மார்க்சீய உழவர் இவர்!
மண்வாச மனிதர் இவர்!
ஏர்பிடித்து உழுபவரின்
ஏற்றத்துக்குக் காகவே
தூர் எடுத்துச் சமுதாயத்தைத்
தூய்மை படுத்துபவர்!
கருத்த மேனிக்குள்ளே
சிவந்த சிந்தனைகள்!
வெறுத்து எவரையுமே
ஒதுக்காத மேன்மைகுணம்!
பொறுமை காக்கின்ற
புரட்சிப் போராளி!
சிறுமை கண்டதுமே
பொங்குகிற தீரரிவர்!
நாட்டாமை செய்கின்ற
அரசியல் வாதிகளிடை
போட்டா போட்டியிடும்
பொல்லாத மனிதரிடை
கோட்டா லைசன்சு
குவிக்கின்ற சூரரிடை
வேட்டை நடத்திடவே
விரும்பாத மனிதரிவர்!
தொல்லை படுகின்ற
தொழிலாளர் தோழரிவர்!
வெல்ல முடியாத
மார்க்சிய வீரரிவர்!
நல்ல கண்ணுஎனும்
நம்கால ஹோசிமின்!
எல்லாரும் எல்லாமும்
என்றும்பெற உழைப்பவர்!
வயல்வெளி மனிதத்தோற்றம்!
வளமான சிந்தனைகள்!
அயலவர்கள் தம்மவரென
இனபேதம் பாராத்தோழர்!
துயரமிலா மனித குலத்
தோற்றத்தைக் கனவுகண்டு
புயலாக உழைக்கின்ற
பொதுவுடைமைப் போராளி!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|