 |
கவிதை
அவள் அப்படியிருந்திருக்க தேவையில்லை...
பரட்டை
பேருந்தில் எதிர்ப்பட்ட
பெண்ணின் உடைகளை களைந்தெரிந்து
மூர்க்கத்தனமாய் முத்தமிட்டுக்கொண்டிருக்கும்
என் நடுநிசிக் கனவொன்று....
அவளுக்கும் எனக்கும்
எந்த சம்மந்தமுமில்லை!
எனக்கானவளாகவோ இல்லை
அவளை விபச்சாரியாகவோ
கற்பனை செய்துகொள்கிறேன்!
அவளின் சதைகளை
மெல்லும் காட்டுமிராண்டியாக
என் லீலைகளனைத்தும் நிறைவேற்றுகிறேன்!
அனைவர் மத்தியிலும்
அவள் காதலனோடு
அங்கம் உரசிக்கொஞ்சிகொண்டிருப்பதை
தவிர வேறெந்த தவறும்
அவள் செய்திருக்கவில்லை!
அவள் அப்படி
செய்யாமலும் இருந்திருக்கலாம்!
- பரட்டை
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|