 |
கவிதை
அது ஒரு காலம்... நிலாரசிகன்
தோட்டகார பய ஒருத்தன்
கல்லால அடிக்க,
ஒத்தக்காலு ஊனமான
ஆட்டுக்குட்டிய தோளுல
சொமந்து ஆட்டம் போட்ட
காலம் நினவுக்கு வந்துருச்சே
நண்பனே!
மீனு புடிக்க ஆத்துக்கு
போயி கெண்ட மீன
புடிச்சுப்புட்டு, பாவப்பட்டு
ஆத்தோட அனுப்பி வச்சு
துள்ளியோடி வீடு வந்த
காலம் நினவுக்கு வந்துருச்சே
நண்பனே!
பள்ளிக்கூடம் விட்டு
திரும்பையில தெருவோரம்
தனியா தவிச்ச நாய்க்குட்டிய
தூக்கி வந்து "ஹார்லிக்ஸ்"
குடுத்து ஒண்ணா வௌயாடுன
காலம் நினவுக்கு வந்துருச்சே
நண்பனே!
தக்காளி செடி ஒண்ணு
கொண்டு வந்து நாம
வளர்க்க,இல விட்ட
செடிமேல ஒரு நாளு
அடைமழை பெய்ய
குடகொண்டு செடிக்கு
காவலா நின்ன
காலம் நினவுக்கு வந்துருச்சே
நண்பனே!
அஞ்சறிவு விலங்குக்கும்,
அஃறிணை செடிக்கும்,
காட்டின அன்பெல்லாம்
காலத்தோட மறந்து போச்சுதே..
அப்பனாத்தாவ அனாதயா
முதியோர் இல்லத்துல
விட்டு வரும்போது
ஆறறிவுல ஒண்ணு
கொறஞ்சு போனதா நினவு
சொல்லுதே நண்பனே!
- நிலாரசிகன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|