 |
கட்டுரை
தர்சினி நவஜோதி ஜோகரட்னம்
பிசாசுகள் கையில்
காயமுற்று பிய்க்கப்பட்டு
தொங்கிய நீ
அசைவற்று
நின்றது எப்படியம்மா?
சீருடை மிருகங்களின்
தகர முகாம்களில்
உன் விசும்பல்
தேய்ந்து கரைந்ததா?
அதிஉயர் பாதுகாப்பு
வளையத்தின்
முள் வேலிகளுக்குள்
எந்தப் பாதுகாப்புமின்றி
நீ
பதை பதைத்திருப்பாயே!
கரை மோதும் கடல்
அலைகளின் பேரிரைச்சலில்
அபலை உன்
தீனக்குரல் க்ஷீணித்துப்
போனதாக நினைத்தாயா?
ஊழியின் ஓங்காரக்
குரலின் முரசறைப்பு
கடல் தாண்டி
நெஞ்சம் அதிரும்
ஓ... தொலைந்துவிட்ட பூவே!
குதறப்பட்ட அற்புதமே!
நீ எம் குடைராட்டினங்களில்
சுற்றிக் கொண்டிருக்கிறாய்
புங்குடுதீவில் தவழ்ந்த அழகே!
உன் உதிர்வு
மலர் உதிர்தல் அல்ல
மேருமலையின் அசைவு
இறுதி நாளின்
எச்சரிக்கை
- நவஜோதி ஜோகரட்னம் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|