 |
கட்டுரை
அன்புக்கோர் சாசனம்! அ.முத்தன்
கருக்குழல் காய்ந்து கால்களொடுதளர்ந்துன் கொங்கைகள் தொங்க
நரையிலும் சுருக்கத்திரையிலும் புதைந்துன்னிழமைக் கட்டிழந்துடலாட
காமுற்றகணைகளெல்லாம் கூர்மழுங்கித்துருவேறி உறவுறத்துடிப் பணைய
அழகுசேர்த்தவிதழெல்லாம் காந்தவிசையற்று வீழ்ந்து முதுமையை நொந்திட
கரங்களோ டங்கங்களும் விருப்பின் குறிப்பாலியங்கிட மறுக்கும்;
காதொடு கண்கள்தம் கர்மத்தைக் கைவிட்டே தடுமாறும் வேளை
நினைவிழந்து குழம்பினின்று நீ "நீ யார்?" என்றெனை அறிந்திடக் கொள்ளா
திகைக்கையிலும், " என் அன்பே!" என்றுனைநானம் முதலிணைப்பின்
இறுக்கத்தில் இடை இம்மியும் இன்றி, இருகைகளாலுனைப் பின்னியே
எடுத்தணைப்பேன் நம்மிரு ஆவியும் உடலும் அடங்கு முன்னும்!
- அ.முத்தன், நியூயார்க் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|