 |
கவிதை
பாராமுகம் முருகன்
சின்னதாய்
தூரல்
சிறு வெள்ளித்
துளியாய்
சிந்திய
அந்தி நேரம்...
சில அடி
தூரத்தில்
சில்லென்று
ஒரு தென்றல்...
குடை
பிடித்துச் செல்லும்
மின்னலாய் நீ...
பக்கம் வந்து
பதட்டமின்றி
நான்
பேசிய
முதல் வார்த்தை...
சிறு
பதட்டத்தோடு
நீ
பேசிய
பதில் வார்த்தை...
பசியற்று
படுக்கை பிடிக்காமல்
பால் நிலா பார்த்து
பகல் போல் கழிந்த
அன்றைய இ(னிய)ரவு...
இதையெல்லாம் - என்
இதயத்தில்
பச்சை குத்தி
பதியவைத்து
பாதுகாத்தது...
இன்று
என்னை - நீ
பாராமுகமாய்
பரிதவிக்க வைத்துப்
பார்க்கத்தானோ...???
- முருகன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|